சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sivakarthikeyan Sai Pallavi
By Swetha Subash May 09, 2022 02:00 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வருகிற மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Sai Pallavi To Pair With Actor Sivakarthikeyan

இந்நிலையில், அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படமாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை, ராஜ் கமல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் எழுந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இன்று சாய் பல்லவியின் பிறந்த நாள் என்பதால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.