காதலர் தின வாழ்த்து சொன்ன விவாகரத்து நடிகர்; வெட்கப்பட்ட சாய் பல்லவி - விஷயம் அதுதான்!
நடிகை சாய் பல்லவி, நடிகர் நாக சைதன்யாவுடன் இனைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாக சைதன்யா - சாய்பல்லவி
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா - நடிகை சாய்பல்லவி இனைந்து நடித்த படம் ’லவ் ஸ்டோரி’. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ’தண்டேல்’ என்ற புதிய படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சாய் பல்லவி, நடிகர் நாக சைதன்யாவுடன் இனைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
காதலர் தின வாழ்த்து
அதில், பனிபொழியும் ஒரு இடத்தில் இருக்கும் சாய்பல்லவியை, நடிகர் நாக சைதன்யா ரொமான்ஸ் உடன் கூப்பிட்டு ’கொஞ்சம் சிரித்தால் என்ன’ என்று கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதைக் கேட்டு சாய் பல்லவியும் சிரிக்கிறார். இந்த வீடியோவின் முடிவில் 'காதலர் தின வாழ்த்துக்கள்' என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய படத்திற்கான புரமோஷனாக இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
Happy Valentine’s ☺️❤️ pic.twitter.com/3yoJm3uU56
— Sai Pallavi (@Sai_Pallavi92) February 14, 2024

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
