அக்கா அழுவுறா, ப்ளீஸ் அவள விடுங்க.. இயக்குனரிடம் வேண்டிய தங்கை - சாய் பல்லவி வெளிப்படை!

Sai Pallavi Tamil Cinema Tamil Actress
By Vinothini Oct 24, 2023 06:30 PM GMT
Report

நடிகை தனது படத்தின் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சாய் பல்லவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர், இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார்.

sai pallavi and sister

தனுஷுடன் மாரி, சூர்யாவுடன் NGK என டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார், தெலுங்கு சினிமாவிலும் அனைத்து டாப் நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார். இவர் தற்பொழுது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சர்ச்சை.. அருகதையே இல்ல, மூடிகிட்டு இருக்கணும் - ஆங்கர் தீபக் பளீச்!

சிவகார்த்திகேயன் சர்ச்சை.. அருகதையே இல்ல, மூடிகிட்டு இருக்கணும் - ஆங்கர் தீபக் பளீச்!

நடிகை பேட்டி

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "ஷ்யாம் சிங்கராய் படத்தில் இரவு நேர சூட்டிங் அதிகமாக இருந்தது. இரவு நேர சூட்டிங் என்றாலே எனக்கு பிடிக்காது. பகல் நேரங்களில் நான் தூங்கவும் மாட்டேன். பகல் நேரங்களில் தூங்கவில்லை என்றால் இரவில் விழித்துக் கொண்டு நடிப்பது என்பது முடியாத ஒரு விஷயம்.

sai pallavi and sister

கிட்டத்தட்ட ஒரு முப்பது நாட்கள் இப்படியே சென்று கொண்டிருந்தது.. இது குறித்து நான் படக்குழுவிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. இது பற்றி என் தங்கையிடம் கூறினேன், அவர் படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று சாய்பல்லவி அழுவுறா.. அவளுக்கு சில நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

என் நிலமையை புரிந்து கொண்டு 10 நாள் நீங்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பத்து நாள் கழித்து படமாகி கொள்ளலாம். நன்கு ஓய்வு எடுத்துவிட்டு வாருங்கள் என்றார்" என்று கூறியுள்ளார்.