மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!

By Thahir Dec 22, 2022 12:13 PM GMT
Report

எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு 

இலக்கியம் சார்ந்து நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வருடா வருடம் விருது வழங்கி வருகிறது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட முக்கிய மொழிகளில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுகாண விருது எந்த நாவல் பெற்றுள்ளது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

Sahitya Akademi Award for the novel

அதன்படி, எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி” நாவலுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1801-ஆம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து இந்த “காலா பாணி” நாவல் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.