அவங்க நல்லா வாழல.. பகீர் கிளப்பும் பிரபல நடிகையின் பக்கத்துவீட்டுக்காரர்கள்
நடிகை சஹானா மற்றும் சஜ்ஜாத் குறித்து அருகில் உள்ள நபர்கள் கூறியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை சஹானா. வளரும் இளம் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் . அதோடு மலையாளத்தில் லாக் டவுன் உட்பட 3 படங்களிலும் நடித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை சஹானா. வளரும் இளம் நடிகையாகவும் மாடலாகவும் வலம் வந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் நடிகை சஹானா. அதோடு மலையாளத்தில் லாக் டவுன் உட்பட 3 படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் தெரிவித்தார். சஹானாவை அவரது கணவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சஹானா மற்றும் சஜ்ஜாத் வசித்து வந்த வீட்டின் அருகில் உள்ளவர்கள் இருவர் குறித்த பகீர் தகவலை கூறியுள்ளனர். அதில் , இருவரும் ஒரு நாளும் அமைதியான வாழ்க்கையை வாழவில்லை என்றும் எப்போதும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் என கூறியுள்ளனர்.
மேலும் ,அவர்கள் வீட்டில் இரவு பகல் என எப்போதும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே சஹானாவின் அம்மா, சஜ்ஜாத்தும் அவரது குடும்பத்தினரும் சஹானாவை தெடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் போன் பண்ணும் போதெல்லாம் சஹானா அழுது கொண்டுதான் இருப்பார் என்றும் கூறியிருந்த
நிலையில், தற்போது அருகில் உள்ள நபர்களும் அதையே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.