போன் பண்ணும் போதெல்லாம் டார்ச்சர் பண்றாங்கன்னு அழுதா : கதறிய இளம் நடிகையின் அம்மா

3 நாட்கள் முன்

கேரளாவில் இளம் நடிகை சஹானா தனது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்து பரபரப்பை கிளப்பிய நிலையில் அவரது அம்மா பல திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்காட் மாவட்டம் செருவத்தூரை சேர்ந்தவர் நடிகை சஹானா. பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருந்தார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள சஹானாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோடைச் சேர்ந்த சஜித் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகு சஹானா கோழிக்கோடில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். கத்தாரில் வேலை பார்த்து வந்த சஜித், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வந்துள்ளார்.

கணவர் குடும்பத்தினருடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததை அடுத்து பரம்பில் பஸார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

சஹானா நேற்று முன் தினம் 21வது பிறந்த நாள், ஆனால் அன்று இரவு மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்ஹவுஸ் ஓனர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது கணவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

போன் பண்ணும் போதெல்லாம் டார்ச்சர் பண்றாங்கன்னு  அழுதா : கதறிய இளம் நடிகையின் அம்மா

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சஹானாவின் அம்மா தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை அவரது கணவரே கொன்றுவிட்டு நாடகமாடுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மீடியாக்களிடம் பேசியுள்ள அவர், என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவள் கொலை செய்யப்பட்டுள்ளாள்.

சஹானா பேசும் போதெல்லாம் அவர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள் அழுது கொண்டே இருந்தாள். சஜித் குடித்துவிட்டு வந்து எப்போதும் பிரச்சனை செய்து கொண்டிருந்தான்.

அவருடைய பெற்றோரும் சகோதரியும் அவளை சித்திரவதை செய்தனர், இதனால் தான் அவர்களை தனி வீட்டிற்கு போகுமாறு கூறினேன். அதன் பிறகும் என் மகளிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும், பணம் வேண்டும் என்றும் டார்ச்சர் செய்வதாக கூறினார்.

போன் பண்ணும் போதெல்லாம் டார்ச்சர் பண்றாங்கன்னு  அழுதா : கதறிய இளம் நடிகையின் அம்மா

நாங்கள் கொடுத்த 25 சவரன் தங்க நகைகளை பயன்படுத்தி கொண்டார்கள். சஹானா பிறந்தநாளில் எங்களை சந்திக்க விரும்பினார், ஆனால் சஜித் எங்களை பார்க்கவோ வீட்டிற்கு அழைக்கவோ அவரை அனுமதிக்கவில்லைஎன்று சஹானாவின் தாய் கதறியுள்ளார்.

இதனிடையே சஹானாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற உண்மை தெரிய வரும் அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.