பிரபல நடிகை சஹானா தற்கொலை சம்பவம்..இது கொலைதான் - பகீர் கிளப்பிய சகோதரர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா சஜத் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் தற்போது பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே சஹானாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரின் தாய் உமைபன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சஹானா தற்கொலையில், அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மரணம் குறித்து அக்கம் பக்கத்தினரும் சஹானா மற்றும் சஜ்ஜாத் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறியுள்ளனர்.
நடிகை சஹானா, தூக்கிட்டுக்கொண்டதாக சஜ்ஜாத் காட்டிய பிளாஸ்டிக் ரோப்பை பறிமுதல் செய்த தடயவியல் துறை அதிகாரிகள் அத்தனை மெல்லிய ரோப்பில் ஜன்னல் கம்பியில் மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சஹானா மற்றும் அவரது கணவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலும் தடயவியல் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சஜ்ஜாத் போதைக்கு அடிமையானவர் என்பதை உறுதி செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த போதை மருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சஜ்ஜாத் பயன்படுத்திய போதை பொருட்களின் தன்மை பற்றி தெரிந்து கொள்ளவும் தடயவியல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதோடு அந்த வீட்டின் உரிமையாளரிடமும் இருவர் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சஹானாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் தங்களின் விசாரணையை அனைத்து வழிகளிலும் துரிதப்படுத்தி உள்ளனர்.
முன்னதாக சஹானாவின் தாய் கூறுகையில் -
என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். அவள் கொலை செய்யப்பட்டாள். கணவர் அடிப்பதாகவும், சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் என்னிடம் சொன்னாள். என் மகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளாள். போலீசார் விசாரணை நடத்தி எனது மகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கதறினார்.
இந்நிலையில் சஹானாவின் சகோதரர் பேசுகையில் -
என் தங்கையின் முதல் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படம் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் என்னிடம் பேசி வந்தார். சஹானா இப்படத்திற்கு பிறகு எனக்கு ப்ரைட்டான பியூசர் இருக்கிறது என்று என்னிடம் அடிக்கடி கூறி வந்தார்.
இப்பட இயக்குனரும் என் தங்கையின் நடிப்பை குறித்து பாராட்டினார். இப்படி இருக்கும் பட்சத்தில் என் தங்கை எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.