முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. மேலும் தற்போது அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் “சகாயம் அரசியல் பேரவை” என்ற அமைப்பு தொடங்கி, இன்று வாக்குப்பதிவு நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.