உங்களுக்கு கிரிக்கெட் விளையாடவே தகுதி இல்ல...கிளம்புங்க - கடுப்பான முன்னாள் வீரர்
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களை அந்த அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் சரமாரியாக விளாசியுள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே முதலிரண்டு போட்டிகள் நடைபெற்ற ஆடுகளம் பந்துவீச்சிற்கு சற்றும் ஒத்துழைக்கவில்லை. ஆடுகளத்தை இவ்வளவு மோசமாக வடிவமைப்பது சரியானது அல்ல என ஆஸ்திரேலிய வீரர்களுடன் சேர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் ஆடுகளத்தை விமர்சிக்கும் வீரர்கள் தாங்களாகவே கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவது நல்லது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விக்கெட் எடுக்க பொறுமை மிக முக்கியம். முதலில் பேட்ஸ்மேன்களுடன் மைண்ட் கேம் ஆடவேண்டும். எப்படிப்பட்ட பிட்ச் என்று பார்த்துவிட்டுத்தான் பந்து வீசுவேன் என்றால் நீங்கள் எதற்கு சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறீர்கள்? என சயீத் அஜ்மல் சரமாரியாக விமர்சித்துள்ளார்.