"தப்பித்து விட்டார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

R Ashwin Saeed Ajmal
By Petchi Avudaiappan Jun 15, 2021 12:49 PM GMT
Report

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்து சிறப்பாக செயல்பட்ட சயீத் அஜ்மல், பவுலிங் ஆக்ஷன் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார்.

இந்நிலையில் இதுகுறித்து Cricwick இணையதளத்துக்கு பேட்டியளித்த சயீத் அஜ்மல் "யாரைக் கேட்டு கிரிக்கெட்டின் விதிமுறைகளை அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தான் விளையாண்ட 8 மாத காலக்கட்டத்தில் தான் அஸ்வின் ஏன் 6 மாதக்காலம் விளையாடாமல் இருந்தார் என்றும், அவருக்கு உதவி செய்யப்பட்டதால் ஐசிசியின் தடையில் இருந்து அஸ்வின் தப்பித்தார்.

ஆனால் பாகிஸ்தான் வீரர்களை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களுக்கு பணம்தான் முக்கியம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.