கிடைக்காத உடல்..மகளின் துண்டான கைக்கு தந்தை செய்த இறுதி சடங்கு - மனதை உலுக்கிய சம்பவம்!
தந்தை ஒருவர் தனது மகளின் கைக்கு இறுதி சடங்கு செய்தது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறுதி சடங்கு
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
பல இடங்களில் இறந்தவர்களின் கை, கால்கள் என உடல் பாகங்கள் தனியாக கிடைப்பதால் அது யாருடையது என கண்டுபிடிப்பதிலும் சிக்கல் எற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தனது கணவருடன் ஜிசா என்ற பெண் வசித்து வந்தார்,
உலுக்கிய சம்பவம்
இவரது தந்தை ராமசாமி. நிலச்சரிவு சம்பவம் அறிந்ததும் அங்கு வந்த அவர் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து தனது மகளை தேடி வந்தார். பல கட்ட தேடுதலுக்கு பிறகு ஒரு கை மட்டும் கிடைத்தது. அதில் இருந்த திருமண மோதிரமும்,
தனது கணவரின் பெயரையும் ஜிசா பச்சை குத்தியிருந்ததை வைத்து அது தனது மகளின் கைதான் என தந்தை ராமசாமி அடையாளம் கண்டு உறுதி செய்தார். எவ்வளவு தேடியும் மகளின் உடல் கிடைக்காத நிலையில் அந்த ஒரு கையை வைத்து இறுதி சடங்குகளை அவ்ர் மேற்கொண்டார்.
அந்த நேரத்தில் அவர் கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. மேலும் மாயமான பலரின் உடல்கள் கிடைக்காத நிலையில் அவர்களது குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.