புனீத் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையணும்.. மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா : வைரலாகும் வீடியோ
கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் அகால மரணம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரின் மறைவையடுத்து இசைஞானி இளையராஜா சிவன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்யும்போது நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி புனீத் ஆன்மா சாந்தியடைய வேண்டியுள்ளார். மோட்ச தீபத்தை ஏற்றிவிட்டு புனீத் ராஜ்குமாரின் ஆன்மா சாந்தியடையட்டும், சாந்தியடையட்டும், சாந்தியடையட்டும் என மூன்று முறை கூறினார்.
https://www.facebook.com/Ilaiyaraaja/videos/1634037856766586/
அந்த வீடியோ இளையராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், அன்புக்குரிய புனித் ராஜ்குமார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தந்துள்ளது. அவரது குடும்பத்தாருக்காக இந்தக் கடினமான நேரத்தில் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.