சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி கொரோனாவால் மரணம்
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்டார். ஈராக்கில் பேரழவிற்கான ஆயுதம் இருப்பதாகக் கூறி அந்நாட்டை ஊடுருவிய அமெரிக்கா சதாம் உசேன் மீது வழக்கு தொடர்ந்து அவரை தூக்கிலிட்டது. அமெரிக்க வரலாற்றில் ஈராக்கை ஊடுவியது இன்று வரை சர்ச்சையான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
இன்று உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா இரக்கம் இல்லாமல் வாட்டி வதைத்து வருகிறது. பல முக்கியப் புள்ளிகளும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அந்த வரிசையில் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கிய ஈராக் நீதிபதி முகம்மது ஒரேபி கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு 52 வயது ஆகிறது. சதாம் உசேன் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.