4 வயது குழந்தைக்கு வன்கொடுமை: வாலிபரை ஓட ஓட வெட்டிய பாட்டி
கரூரின் குண்டாங்கல்பாரை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், கூலித்தொழிலாளி ஒருவர் தன்னுடைய 4 வயது மகளை அவரது பாட்டி வீட்டில் விடுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
மாணிக்கமோ, குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று தகாதமுறையில் நடந்து கொண்டுள்ளார், பின்னர் குழந்தையை வீட்டில் விட்டுள்ளார்.
குழந்தை 4 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட மருத்துவமனையில் பரிசோதித்த போது தான் குழந்தைக்கு நடந்த கொடுமை குறித்து தெரியவந்துள்ளது.
இதனால் கடும்கோபமடைந்த பாட்டி, மாணிக்கத்தை தேடி வந்துள்ளார், குளித்தலை சுங்கச்சாவடி அருகே கண்டுபிடித்ததும் அவரை இழுத்து சென்று போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க சென்றுள்ளார்.
ஆனால் ஆத்திரம் தாங்காமல் அவரை சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார், இதனை பார்த்த உறவினர்களும் மாணிக்கத்துக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் மாணிக்கத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், தொடர்ந்து வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.