சார் இது சோகமான நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் : மம்தா பானர்ஜி

BJP Narendra Modi
By Irumporai Dec 30, 2022 10:27 AM GMT
Report

மேற்கு வங்கத்திற்கு வரமுடியாததால் மன்னிப்பு கேட்ட மோடிக்கு, நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தாயார் மரணம்

பிரதமர் நரேந்திர மோடி, தன் தாயார் மறைவால் மேற்கு வங்கத்திற்கு நேரில் வர முடியவில்லை என்பதற்காக மோடி, மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தயவுசெய்து கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஒய்வெடுங்கள்  

இது உங்களுக்கு சோகமான நாள், உங்கள் அம்மா என்றால் எங்களுக்கும் அவர் அம்மா தான். உங்களது பணி தொடர, அந்த கடவுள் உங்களுக்கு வலிமையை தரட்டும், என்று அவர் மேலும் கூறினார்.

சார் இது சோகமான நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் : மம்தா பானர்ஜி | Sad Day Mamata Banerjee Modi

மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றுள்ளார்.