பலி வாங்கிய தொங்கு பாலம் : பொறுப்பேற்ற குஜராத் அரசு

Gujarat Crime
By Irumporai Oct 31, 2022 06:50 AM GMT
Report

குஜராத் மாநிலம் மோர்பில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நுஇலையில் இந்த விபத்திறகு குஜாராத மாநில அரசு பொறுப்பேற்பதாக முதலமைச்சர் குபிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பழைமையான  பாலம்  

மோர்பி நகரில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மச்சி நதியின் குறுக்கே 1879ஆம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கும் பாலம் அமைக்கப்பட்டது சுற்றுலாத் தலமாக கருதப்படும் இந்த பாலம் பழுதடைந்த காரணத்தின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட நிலையில் கடந்த 26ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

பலி வாங்கிய தொங்கு பாலம் : பொறுப்பேற்ற குஜராத் அரசு | Sacrificed Bridge Gujarat Government In Charge

பாரம் தாங்காமல் விபத்து

நேற்று விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மோர்பி நகருக்கு வந்தனர் பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என்று கூறப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாரம் தாங்க முடியாமல் அதில் இருந்த கேபிள்கள் அறுந்து விழுந்து ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர் . நீச்சல் தெரிந்த சிலர் தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர் குழந்தைகள் பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து நிலையில் மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டு விட்டனர் .

பொறுபேற்ற குஜராத் அரசு

அதே சமயம் நீரில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நூறினை கடந்துள்ளது, இந்த நிலையில் குஜாராத்தின் தொங்கு பால விபத்து குறித்து பாரமரிப்பு குழுவின் மீது வழக்கு தொடரப்படும் என தகவல் வெளியான நிலையில்.

இந்த கொடும் விபத்திற்கு குஜாராத் அரசு பொறுப்பேற்பதாக அம் மாநில முதலமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.