சாக்கு பையில் கேட்ட அழுகுரல்: திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ச்சி விமான நிலையம் அருகே சாக்குபையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் நேற்று பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் விரைந்து வந்த விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு போலீசார், அங்கிருந்து சாக்கு பையை கண்டெடுத்தனர்.
அதை பிரித்து பார்த்த போது, பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த குழந்தை 7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததும், அதனால் அந்த குழந்தையை அதன் தாய் சசாக்குப்பையில் வைத்து வீசிச்சென்றதும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.