மீண்டும் மும்பை அணியினருடன் இணைந்த சச்சின் டெண்டுல்கர்

IPL 2021 Mumbai Indians sachintendulkar CSK vs MI
By Irumporai Sep 18, 2021 06:45 AM GMT
Report

கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இந்நிலையில் மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர், அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013 முதல் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின் பணியாற்றி வருகிறார்.

கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரபு அமீரகத்துக்கு சச்சின் செல்லவில்லை.இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணியினருடன் சச்சின் மீண்டும் இணைந்துள்ளார். 6 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அணி வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் சச்சின் பகிர்ந்துள்ளார்.

மும்பை அணியில் சச்சினின் மகன் அர்ஜுன் இடம்பெற்றுள்ளார். 7 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.