சச்சின் 50-வது பிறந்தநாள் : கெளரவம் அளித்த சிட்னி மைதானம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நுழைவு வாயிலுக்கு , சச்சின் மற்றும் லாராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிட்னி மைதானம்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிகெட் மைதானம் சச்சின் டெண்டுல்கரை சிறப்பித்துள்ளது, டெண்டுல்கரின் 50 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மைதானத்தில் நுழைவு வாயில்களை இந்திய ஜாம்பவான் மற்றும் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த சக கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாராவின் பெயரில் திறந்து வைத்துள்ளது.
சச்சின் பெயர்
மைதானத்திற்கு வருகை தரும் அனைத்து வீரர்களும், புதிதாக திறக்கப்பட்டுள்ள லாரா-டெண்டுல்கர் கேட்ஸ் வழியாக களத்தில் இறங்குவார்கள். டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுபவதை ஒட்டி, இவ்விருவருக்கும் இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
சிட்னி மைதானம் சச்சினுக்கு எப்போதும் சிறபான ஒரு மைதானமாகும் ஏனெனில் இந்த சிட்னி மைதானத்தில் தான் சச்சின் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார், சிட்னி மைதானத்தில் இது வரை 13 சரவ்தேச போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் நான்கு சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.