சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி இதை மட்டும் செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர் பேட்டி
சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலி இதை மட்டும் செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
தாய் நாடான இந்திய மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதனையடுத்து, சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார். கிரிக்கெட் போட்டியில் சச்சின் 20 சதம் அடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இனனிங்சில் தான் அடித்திருந்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் பேட்டி
இது குறித்து செய்தியாளர்களிடம் சுனில் கவாஸ்கர் பேசுகையில், சச்சின் 40 வயது வரை கிரிக்கெட் உலகில் விளையாடினார். அதற்கான உடல் திறனோடும் அவர் இருந்தார். கோலியும் பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஆண்டுக்கு 6-7 சதங்கள் வீதம் அவர் பதிவு செய்தால் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை அவர் எட்டுவார். அதற்கு அவர் 40 வயது வரை விளையாட வேண்டும்.
அந்த வயதில் அவர் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட ஏதும் கிடையாது. அதற்கு நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்றார்.