கையில் கோப்பையுடன் ஜாலியாக கொண்டாடிய சச்சின்... - வைரலாகும் வீடியோ

Sachin Tendulkar Viral Video
By Nandhini Oct 03, 2022 02:05 AM GMT
Report

சர்வதேச கிரிகெட் போட்டி

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வந்தனர்.

இதன் இறுதிப்போட்டியில் நேற்று இரவு இந்திய லெஜன்ட்ஸ் அணியும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா லெஜன்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இப்போட்டியின் இறுதியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தி, இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக நமன் ஓஜா தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரின் தொடர் நாயகனாக இலங்கை அணி வீரர் தில்சன் தேர்வு செய்யப்பட்டார்.

sachin-tendulkar-viral-video

ஜாலியாக கொண்டாடிய சச்சின்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற சச்சின் தலைமையிலான ‘இந்திய லெஜெண்ட்ஸ்’ அணி, கையில் கோப்பையுடன் சச்சின் மற்றும் பதான் சகோதரர்கள் ஜாலியாக கொண்டாடியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.