‘பேருந்தில் பயணம் செய்யும் சச்சின் டெண்டுல்கர்' - இணையத்தில் புகைப்படம் வைரல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான், கிரிக்கெட் கடவுள் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணி எத்தனை இக்கட்டான நிலையில் இருந்தாலும் தனது உறுதியான பேட்டிங்கால் சச்சின் அணியை மீட்டெடுப்பார் என ரசிகர்கள் உறுதியாக நம்பும் அளவிற்கு அணியை வழி நடத்தி உலக அளவில் இந்தியாவை பெருமைக்குள்ளாக்கியவர்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தான் பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
⏪ Rewind to childhood ⏪ pic.twitter.com/coWn58hGiH
— Sachin Tendulkar (@sachin_rt) April 4, 2022
அந்த ட்விட்டர் பதிவில், குழந்தை பருவத்திற்கு திரும்பியதை நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் சிறு வயதில் அரசு பேருந்து மற்றும், புறநகர் ரயில்களில் பயணித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பேருந்தில் பயணம் செய்த அவர், அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.