Wow...மும்பையில் சச்சினுக்கு முழு உருவச் சிலை - குஷியில் ரசிகர்கள்...!

Sachin Tendulkar Cricket Indian Cricket Team Mumbai
By Nandhini Feb 28, 2023 06:52 AM GMT
Report

சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பை வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட உள்ளது.

சச்சின் டெண்டுல்கர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 1992, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் சச்சினை உலக அரங்கில் தலை சிறந்த ஆட்டக்காரராய் தன்னை நிலை நிறுத்தினார்.

1993-ல் அசாருத்தீன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணிக்கு சச்சின் துணைத் தலைவராய் 18 வயதிலேயே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலி மேத்தா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் சச்சின். இத்தம்பதிக்கு சாரா, அர்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

sachin-tendulkar-statue-at-wankhede-stadium

சச்சினுக்கு சிலை

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பை வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட உள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு வரும் ஏப்ரல் 24ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இதனையடுத்து, அவருக்கு நினைவுப் பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலை திறக்கப்பட உள்ளது. வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசிப் போட்டியை விளையாடினார். இதற்காக அங்கு ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்க இருக்கிறது. 

சச்சின் நெகிழ்ச்சி

வான்கடே மைதானத்தில் எம்.சி.ஏ., அமைப்பால் அமைக்கப்பட்டு வரும் அவரது உருவச் சிலை குறித்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், "இது எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறது. இங்கு தான் என் கேரியர் தொடங்கியது. நம்பமுடியாத நினைவுகளுடன் கூடிய பயணம் இது. எனது தொழில் வாழ்க்கையின் சிறந்த தருணம் 2011ம் ஆண்டு நாங்கள் உலகக்கோப்பை வென்றபோது இங்கு வந்தது என்றார். 

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.