மிஸ்டர் பில்லி ,இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?’- வீடியோவை வெளியிட்டு கலாய்த்த சச்சின்

viralvideo sachintendulkar umpire billybowden
By Irumporai Dec 14, 2021 12:40 PM GMT
Report

கிரிக்கெட் உலகில் பல நடுவர்கள் பட்டியலில் ரசிகர்களை கவர்ந்து முதலிடத்தில் உள்ளவர் பில்லி பவுடன்.

ஒவ்வொரு முறையும் பில்லி பவுடன் அவுட் கொடுக்கும் போது அல்லது பவுண்டரி, சிக்ஸ் செய்கை காட்டும் போது நமக்கு ஒரு பெரிய இன்பமாக அமையும். கிரிக்கெட் போட்டியுடன் சேர்ந்து அவருடைய செய்கைகளும் நமக்கு பெரிய விருந்தாக அமையும்.

இந்தநிலையில், அவருக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்தியாவில் உள்ளூர் போட்டியில் நடுவர் ஒருவர் வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.  

இதையடுத்து, பில்லி பவுடனை கிண்டல் செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்த ஸ்டைலுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க பில்லி பவுடன் என்று நக்கலாய் கேள்வி எழுப்பியுள்ளார். இதைப்பார்த்த சச்சின் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.