மிக விரைவில் சென்றுவிட்டீர்கள்.... - வர்னே குறித்து சச்சின் உருக்கம்

Sachin Tendulkar Shane Warne Twitter Cricket
By Nandhini Sep 13, 2022 09:10 AM GMT
Report

மிக விரைவில் சென்றுவிட்டீர்கள் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே குறித்து சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஷேன் வார்னே

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே 1969ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி பிறந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். வார்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் (708) வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். தனது மாயாஜால பந்துவீச்சால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். ஷேன் வார்னே கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.

இன்று வர்னே பிறந்த தினம்

தனது 52வது வயதில் வார்னே கடந்த மார்ச் 4-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த வார்னேவின் இன்று 53-வது பிறந்த தினம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வர்னேவிற்கு சமூகவலைத்தளங்களில் பலர் புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

sachin-tendulkar-shane-warne-twitter-msg

புகழ் அஞ்சலி செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

இந்நிலையில், ஷேன் வார்னேவுக்கு கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், வார்னேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் பிறந்த தினத்தன்று உங்களை நினைக்கிறேன் வார்னே. மிக விரைவில் சென்றுவிட்டீர்கள். உங்களுடன் மிகவும் சிறப்பான நினைவுகளை கொண்டுள்ளேன். அவற்றை என்னென்றும் போற்றுவேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த டுவிட் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.