நியூசிலாந்திடம் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணமா?
நியூசிலாந்து அணியிடன் இந்திய அணி தோற்றதற்கு என்ன காரணம் என சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என இந்திய வீரர்கள் அனைத்திலும் சொதப்பினர்.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் மூன்று வெற்றிகளை அதிக நெட் ரன் ரேட்டுன் பதிவுசெய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால் இந்தியாவின் வாய்ப்பு கிட்டதட்ட பறிபோயுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது எப்படி என்பது குறித்து சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது 6 ஓவர்கள் முடிந்தப் பிறகு 10 வது ஓவர் வரை இந்தியா 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. சுலபமான சிங்கிள்களை எடுக்க முடியவில்லை. நாம் அந்த இடத்தில்தான் கோட்டைவிட்டுவிட்டோம். இதனால், பெரிய ஷாட்களை அடித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டபோது, விக்கெட்களை இழந்தோம் என சச்சின் தெரிவித்துள்ளார்.
மேலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவர் பிளேவில் பவுலிங் சேஞ்சை அற்புதமாக செய்தார். இதனால் 35 ரன்களை மட்டுமே அவர்கள் விட்டுக்கொடுத்தனர். அதில் 5 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது என சச்சின் கூறியுள்ளார்.