அம்பயராக மாறிய சச்சின் டெண்டுல்கர் - ஐபிஎல் போட்டியில் நடந்த சிறப்பான சம்பவம்

sachintendulkar IPL2022 GTvPBKS PBKSvGT
By Petchi Avudaiappan Apr 09, 2022 12:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. 

மும்பையில் நடைபெற்ற இந்த 16வது போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 64, ஷிகர் தவான் 35 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட குஜராத் அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் 96 ரன்கள் விளாசினார். தொடர்ந்து கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி 2 பந்துகளில்  ராகுல் திவேடியா  2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற வைத்தார். 

இதனிடையே இந்தப்போட்டி நடக்கும் போது வெளிப்பட்ட ஒரே ஒரு குரல் மட்டும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. அதாவது சச்சின் டெண்டுல்கர் மைக்கில் பேசுவது போன்று. ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை அர்ஷ்தீப் சிங் மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு வேகமாக ரன் எடுக்க ஓடினார். 2வது ரன் எடுப்பது ரிஸ்க் எனத்தெரிந்தும் துணிந்துச்சென்றார், அப்போது விக்கெட் கீப்பர் பந்தை தவறவிட்டதால் மூன்றாவது பந்திற்கான ஓட்டமும் நடந்தது. 

இந்த முறை பந்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஹர்திக் பாண்ட்யாவிடம் சென்றது. ஆனால் பாண்ட்யா பந்தை வைத்து ஸ்டம்பை அடிப்பதற்கு முன்னதாக தனது கால்களால் ஸ்டம்பை தொட்டுவிட்டார். இதற்காக முடிவு எடுக்கும் உரிமை 3வது நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நான் நன்கு ஆராய்ந்துவிட்டேன், எனது முடிவை அறிவிக்கவுள்ளேன் என ஒரு குரல் வந்தது. அது கேட்க சச்சின் டெண்டுல்கரின் குரல் போன்றே இருந்ததால் அவர் 3வது நடுவராக செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் 3வது நடுவரின் பெயர் பாஷ்சிம் பதாக் என டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்ட பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.