என் பொண்ணு daily இப்படி தான் சம்பாதிக்கிறா..!! வைரலாகும் சச்சின் Deep Fake வீடியோ..!
Deep fake technology இன்றைய சமூகத்தின் மிக பெரிய தலைவலியாகவே மாறியுள்ளது.
Deep Fake
நவீன வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தான். ஆனால், அப்படி அடையப்படும் வளர்ச்சிகளில் சில, பின்நாளில் மக்களின் வாழ்விற்கே பெரும் சங்கடத்தை உருவாக்கி விடுகினறன.
அப்படி இந்த நவீன உலகத்தின் மிக பெரிய தலைவலியாக உருப்பெற்றுள்ளது DeepFake வீடியோ. ஆம், சம்மந்தப்படாத நபர் ஒருவரை, அவரை போலவே சித்தரித்து, பல வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
இந்த பிரச்சனையில் தான் தற்போது கிரிக்கெட் உலகத்தின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சிக்கியுள்ளார். ஆன்லைன் கேம் தொடர்பான விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கரின் குரல் மற்றும் அவரது முகம் பயன்படுத்தப்பட்டு அந்த ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவது போல வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
சச்சின் வீடியோ
அந்த டீப் ஃபேக் வீடியோவில், ஆன்லைன் கேம் ஆப் மூலமாக தனது மகள் சாரா நாள்தோறும் ரூ.1.8. லட்சம் வரையில் சம்பாதிக்கிறாள். ஆதலால் அந்த ஆப்பை அனைவரும் பயன்படுத்துமாறு வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், "இந்த வீடியோக்கள் போலியானது. டெக்னாலஜி தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது.
These videos are fake. It is disturbing to see rampant misuse of technology. Request everyone to report videos, ads & apps like these in large numbers.
— Sachin Tendulkar (@sachin_rt) January 15, 2024
Social Media platforms need to be alert and responsive to complaints. Swift action from their end is crucial to stopping the… pic.twitter.com/4MwXthxSOM
இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் குறித்து அதிகளவில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
முன்னதாக நடிகை ரஷ்மிகா மந்தனா குறித்து மிகவும் அருவெறுக்க தக்க வகையில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு, போலி வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
