T20 உலக கோப்பை போட்டி : அரையிறுதி வாய்ப்பு இவங்களுக்குதான்? - சச்சின் தெண்டுல்கர் கணிப்பு
T20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்து கூறியுள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
சச்சின் தெண்டுல்கர் கணிப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை எட்டும் அணிகள் எவை என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் -
அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னேறும் என்பதே எனது கணிப்பு. அதே சமயம் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா எதிர்பாராத வகையில் வியப்பூட்டும் அணிகளாகும். இந்திய அணி உலக சாம்பியனாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும் என்றார்.