குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சச்சின் - வைரலாகும் வீடியோ
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 1992, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் சச்சினை உலக அரங்கில் தலை சிறந்த ஆட்டக்காரராய் தன்னை நிலை நிறுத்தினார்.
1993-ல் அசாருத்தீன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணிக்கு சச்சின் துணைத் தலைவராய் 18 வயதிலேயே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி மேத்தா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் சச்சின். இத்தம்பதிக்கு சாரா, அர்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சச்சின்
இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் குழந்தைகளுடன் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோக்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.