தோனியுடனான புகைப்படத்தை தவிர்த்த சச்சின் - திடீரென வெடித்த சர்ச்சை!
ட்விட்டரில் சச்சின் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகக்கோப்பை
தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை நினைவுகூர்ந்து சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டார்.
அதில், சச்சின் டெண்டுல்கர், வேண்டுமென்றே கேப்டன் தோனி இருக்கும் உலகக்கோப்பை புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிடவில்லை என்று ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர். யுவராஜ் சிங்கும் தோனியுடனான புகைப்படத்தை பதிவிடவில்லை என்றும் சர்ச்சைகள் கிளம்பியது.
சர்ச்சை
ஏற்கனவே கம்பீர் சில தருணங்களில், உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி மட்டும் காரணமல்ல. அது அனைத்து வீரர்களின் கூட்டு உழைப்பு என்று கூறி வந்துள்ளார். இதுகுறித்து விசாரிக்கையில், சச்சின் பதிவிட்ட புகைப்படத்தில் ஹர்பஜன் சிங் பின்னால் தோனி நின்றுகொண்டு தான் இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பையை நினைவு கூர்ந்து பதிவிட்ட புகைப்படங்களில் தங்களை முன்னிறுத்திய புகைப்படங்களையே பதிவிட்டனர். அந்த வகையில் சச்சின் தனது கையில் உலகக்கோப்பை இருக்கும் புகைப்படத்தையும், அணியினர் அனைவரும் உடனிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.