ப்ளீஸ்... என் மகனை விட்டுவிடுங்கள்... அழுத்தம் கொடுக்காதீங்க.. - சச்சின் வேண்டுகோள்..!
என் மகனை விட்டுவிடுங்கள், அழுத்தம் கொடுக்காதீங்க என்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 1992, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் சச்சினை உலக அரங்கில் தலை சிறந்த ஆட்டக்காரராய் தன்னை நிலை நிறுத்தினார்.
1993-ல் அசாருத்தீன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணிக்கு சச்சின் துணைத் தலைவராய் 18 வயதிலேயே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலி மேத்தா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் சச்சின். இத்தம்பதிக்கு சாரா, அர்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சாதனைப் படைத்த அர்ஜூன் டெண்டுல்கர்
சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சித் தொடரின் அறிமுக போட்டியிலேயே சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். கோவா அணிக்காக விளையாடிய அர்ஜூன், 112* ரன்களுடன் விளையாடி வருகிறார். கடந்த 1988ஆம் ஆண்டு ரஞ்சி தொடரின் அறிமுகப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அழுத்தம் கொடுக்காதீங்க...
இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் பேசுகையில்,
என் மகன் ஒரு கிரிக்கெட் வீரரின் மகனாக பல கடினங்களைச் சந்தித்திருக்கிறார். நான் ஓய்வு பெறும்போதே, அர்ஜுன் மீது அழுத்தம் ஏற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.
என் மகன் கிரிக்கெட்டை நேசிக்கட்டும். அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்குங்கள். அர்ஜுன் மேல் அழுத்தம் கொடுக்காதீங்க.
நான் ஆடும்போது என் பெற்றோர்கள் எனக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அதனால்தான் என்னால் சுதந்திரமாக விளையாட முடிந்தது. இதைத்தான் நான் என் மகன் அர்ஜுனுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.