என்னால் நிம்மதியாக தூங்க முடிந்ததில்லை - மனம் திறந்த டெண்டுல்கர்

Sachin Tendulkar
By Petchi Avudaiappan Jun 24, 2021 12:35 PM GMT
Report

 போட்டியின் முந்தைய இரவுகளில் என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக "மும்பை டைம்ஸ்" நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், "என் கிரிக்கெட் வாழ்க்கையின் 10 முதல் 12 ஆண்டுகள் ஒவ்வொரு போட்டிக்கும் முந்தைய இரவுகளில் என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை.

அப்படியே தூங்கினாலும் திடீரென விழித்துக்கொள்வேன். என் மூளையில் போட்டி குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் என கூறியுள்ளார்.

அதன்பின் போட்டி நாட்களுக்கு முந்தைய நாட்களில் டிவி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, கேம் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டதாகவும், அதன்மூலம் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சச்சின் தெரிவித்துள்ளார்.