காதலியை கரம்பிடிக்கும் அர்ஜூன் - சச்சின் டெண்டுல்கர் வீட்டில் டும் டும்
அர்ஜூன் டெண்டுல்கர் திருமணம் மார்ச் மாதம் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அர்ஜூன் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு டிரேட் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீண்ட நாட்களாகவே தனது அக்கா சாரா டெண்டுல்கரின் தோழியான சானிய சந்தோக் உடன் காதலில் இருந்து வந்தார். சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி. விலங்குகள் நலனில் அதிக ஆர்வம் கொண்ட அவர், ஒரு சான்றளிக்கப்பட்ட கால்நடை தொழில்நுட்ப வல்லுநர்.
திருமணம்
இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதமே அர்ஜூன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், மார்ச் 5ஆம் தேதி அர்ஜூன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இதனால் ஐபிஎல் தொடருக்கு முன் அர்ஜூன் டெண்டுல்கர் திருமணத்தை முடித்து, பின்னர் லக்னோ அணிக்காக விளையாட வருவார் என்று பார்க்கப்படுகிறது.