சச்சினிடம் விராட் கோலி செய்த சம்பவம் - பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உணமை
தான் ஓய்வு பெறும் நேரத்தில் விராட் கோலி கொடுத்த பரிசு ஒன்றை குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். அவரின் ஓய்வு நாளின் போது அப்போதைய இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி அவருக்கு நினைவுப்பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
அதை வாங்கி சிறிது நேரம் மட்டுமே வைத்திருந்த சச்சின் மீண்டும் அதை கோலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அந்த பரிசு ஒன்றை குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தன்னிடம் விராட் கோலி கொடுத்தது மறைந்த தந்தை கொடுத்த ஒரு புனித கயிறு தான்.மேலும் அவரிடம் விலை மதிப்பில்லாத இந்த புனித கயிறு, உன்னிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். இது உன்னுடைய சொத்து. உன்னுடைய கடைசி மூச்சு வரை, இதனை நீ வைத்திருக்க வேண்டும்.
மறைந்த தந்தை கொடுத்து விட்டுச் சென்ற புனித கயிற்றினை எதிர்பார்ப்பு ஏதுவும் இல்லாமல் சச்சினுக்கு அளிக்க வேண்டும் என்ற கோலியின் முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.