விராட் கோலி இதை கவனமாக செய்ய வேண்டும் - சச்சின் சொன்ன அட்வைஸ்

Kohli India Sachin BCCI Test Championship
By mohanelango Jun 18, 2021 07:38 AM GMT
Report

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடி இங்கிலாந்து சவுத்தாம்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.

இரண்டு அணிகளும் இந்தப் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வந்தன. இதில் வெல்பவர்கள் டெட்ஸ் கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக விளங்குவர். 

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கள் மிக முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். 

விராட் கோலி இதை கவனமாக செய்ய வேண்டும் - சச்சின் சொன்ன அட்வைஸ் | Sachin Gives An Important Advice To Virat Kohli

அதில், “விராட் கோலி சற்று நகர்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் விராட் கோலி எப்போதும் கவர் டிரைவ் ஆடுவதில் விருப்பம் காட்டக்கூடிய ஒரு வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் இங்கிலாந்து மைதானங்களில் பந்து எப்பொழுது எந்த வேகத்தில் வருகிறது, அப்படி வருகின்ற பந்து எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை நம்மால் கணிக்க முடியாது.

எனவே நாளை நடக்க இருக்கின்ற இறுதிப் போட்டியில் விராட் கோலி சற்று நகர்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்துகளைக் ஸ்விங் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள். எனவே அவர்களுடைய பந்துகளை சற்று நிதானமாக கணித்து ஆட வேண்டும்: என்றுள்ளார்.