சினிமாவில் அறிமுகமாகும் சச்சினின் மகள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Sachin Tendulkar
By Petchi Avudaiappan
முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினருக்கு அர்ஜூன் டெண்டுல்கர், சாரா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இதில் அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட் உலகில் கால் பதித்து ஆர்வம் காட்டி வருகிறார்.
மகள் சாரா மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்து அசத்தியிருந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும் சாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பில் அதிக ஆர்வம் உடைய சாரா அதுதொடர்பான பயிற்சிகளையும் கற்று வருவதாக கூறப்படுகிறது .மேலும் மாடர்ன் உடையில் இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே ஷாஹித் கபூருக்கு ஜோடியாக சாரா அறிமுகமாகிறார் என்று தகவல் பரவிய நிலையில், அதனை சச்சின் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.