"கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தயவுசெய்து பிளாஸ்மா தானம் செய்யுங்கள்" - சச்சின் வேண்டுகோள்
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா ரத்த தானம் செய்யுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் அவரின் தலைச் சிறந்த இன்னிங்ஸ்களை நினைவுக் கூறுவார்கள்.
இந்நிலையில் தனது பிறந்தநாளுக்காக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.