சச்சின் மகனின் பந்துவீச்சை பொளந்து கட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் யார் தெரியுமா?
உள்ளூர் பயிற்சி ஆட்டத்தில் கேப்டனாக தலைமை வகித்த சூர்யகுமார், சச்சின் மகன் அர்ஜூனின் ஓவரில் ரன்களை விளாசி தள்ளினார். ஐபில் தொடரில் நீண்ட நாட்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வருபவர் தான் சூர்யகுமார் யாதவ்.
இந்தியா அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மட்டும் இவருக்கு எட்டாக்கனியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று யஷ்வி ஜெய்ஸ்வால் தலைமையிலான உள்ளூர் அணியை சூர்யகுமார் யாதவ் அணி எதிர்கொண்டது. ஜெய்ஸ்வால் அணியில் சச்சினின் மகன் அர்ஜுன் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அர்ஜுன் வீசிய பந்துகளை விளாசிய சூர்யகுமார் யாதவ் ஒரே ஓவரில் 21 ரன்களை விளாசினார். இவரது அதிரடியைக் கண்ட அர்ஜுன் டெண்டுல்கர் அரண்டு போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சூர்யகுமார் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.