சபரிமலை கோவிலில் விதிக்கப்பட்ட தடை நீக்கம் - பக்தர்களுக்கு அனுமதி

Permission Temple Sabarimalai
By Thahir Nov 20, 2021 04:25 AM GMT
Report

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளம் மாநிம், பத்னம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பம்பை ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்து ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்து வெள்ளம் குறைந்திருப்பதால் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்து தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாகவும்,

பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டும் சபமரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.