சபரிமலையில் என்ன நடக்கிறது? கதறும் பக்தர்கள் - அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
ஐயப்ப பக்தர்கள் பல சிரமங்களை சந்தித்து வருவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் லட்சணக்கான பக்தர்கள் வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறி வருகிறது.

மேலும், பெண் பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், ஆண்டுதோறும்
நாத்திக இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதைப் பார்ப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் மோசமான நிர்வாகத்தால் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதிர்ச்சி வீடியோ
ஒருபுறம், பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை; மறுபுறம், ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம் மற்றும் சுப்பிரமணிய மத அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தங்கள் தன்னார்வ ஆதரவை வழங்குவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.
It is truly disheartening to witness how, year after year, the atheist LDF govt’s apathy has resulted in avoidable hardship for lakhs of Ayyappa devotees.
— K.Annamalai (@annamalai_k) November 20, 2025
Pilgrims from across the nation are being put through immense difficulty due to the LDF govt’s poor preparation and… pic.twitter.com/9TPyAa3baZ
சபரிமலை வெறும் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; அது நம் நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக மையமாகும். ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது, அதன் பொறுப்பை நேர்மையுடனும் மரியாதையுடனும் நிலைநிறுத்துவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.