சபரி வர்மன் மரணம்.., நிவாரண உதவிகளை ஏற்க மறுத்த குடும்பத்தினர்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சபரி வர்மன் என்பவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபரி வர்மன் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்தவர் சபரி வர்மன் (35).
மாற்றுத்திறனாளியான இவர் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரி வர்மனின் மரணத்துக்கு நீதி கேட்டு, அவரது குடும்பத்தினர் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விக்கு உதவி, வீட்டுமனை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் நேற்று சபரிவர்மனின் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, அமைச்சர்கள் வழங்க முன்வந்த நிவாரண உதவிகளை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
குடும்பத்தினர் கூறுகையில்.,
சபரி வர்மன் உயிரிழந்தது குறித்து முதல்வர் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
சபரி வர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தன. ஆனால், அந்த காயங்களால் உயிரிழப்பு ஏற்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பிரேத பரிசோதனை வீடியோவை எங்களது தரப்பு மருத்துவக் குழுவிடம் வழங்கி ஆய்வு செய்ய உள்ளோம்.

சபரி வர்மன் உயிரிழந்த நேரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அறிக்கையில் தவறு இல்லை என்பது உறுதியானால் உடலை வாங்கத் தயாராக உள்ளோம்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறை வார்டன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறையில் இருந்த 8 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என கூறப்படுகிறது. எனவே, இந்த வழக்கை திசைதிருப்பும் முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.