''இத மிஸ் பண்ணிட்டா அவ்வளவு தான் '' - இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்

southafrica sabakarim indiatour
By Irumporai Dec 19, 2021 11:54 AM GMT
Report

தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு இதுதான் சரியான வாய்ப்பு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தனிமைப்படுத்துதலில் இருந்துகொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி இதற்கு முன்னதாக ஏழு முறை தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் ஆறு முறை தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளையும் பெறுவதற்கு உதவினர். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமான பார்மில் இருக்கின்றனர்.

ஆகையால் இம்முறை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக வெல்வதற்கு இதுதான் சரியான வாய்ப்பு என்று முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியா 2-0 அல்லது 2-1 என வெல்லும் என்று நினைக்கிறேன்.

ஒருநாள் தொடரை பொறுத்தவரை பேசவே தேவையில்லை. நிச்சயம் இந்திய அணி மிகவும் பலமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் விதம் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்

குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக இல்லாத போது, வெளியில் அமர்ந்திருந்த வீரர்கள் உள்ளே வந்து அணியின் வெற்றிக்கு எவ்வாறு பங்களிப்பை கொடுத்தனர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இதனை வைத்து பார்க்கையில், தென்ஆப்பிரிக்கா தொடர் நிச்சயம் இந்தியா வசம் இருக்கிறது.

இதுவரை நிகழ்ந்து வந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இம்முறை வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை கோலி தலைமையிலான அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இதுவரை இல்லாத அளவில் சோதனைகள் காத்திருக்கிறது.” என்றும் தெரிவித்தார்