‘போட்டியில் ஜெயிக்கிறது மட்டும் சாதனை இல்லை’ - ரோகித் சர்மாவை கடுமையாக எச்சரித்த முன்னள் வீரர்
உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயார் செய்ய வேண்டும் என கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.இதில் முதலில் நடைபெறும் நடக்கும் டி20 தொடரில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் அந்த அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் ரோகித் சர்மாவை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரிம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மாவின் ஒரே குறிக்கோளாக எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரும் தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் ரோகித் சர்மாவிற்கு அதற்கான நேரம் அதிகமாக இல்லை. எனவெ மிகக்குறுகிய நேரத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்து இந்திய அணியில் விளையாட வைத்து திறமையை பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய அணியின் மிகப் பெரும் சிக்கலாக இருப்பது இந்திய வீரர்களின் உடற்தகுதி தான் என்பதால் ரோகித் இதை கவனத்தில் கொள்ள் வேண்டும் என சபா கரீம் கூறியுள்ளார்.