ரோகித் சர்மா பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் : முன்னாள் வீரர் எச்சரிக்கை
இந்திய அணி வீரர் ரோகித் சர்மா பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சாபா கரீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்குப் பிறகு இந்திய அணி தொடரில் விளையாடுவதால் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓப்பனிங் வீரராக அசத்தும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சொதப்பி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில தினங்களாக எழுந்து வருகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா தனக்கு பின்னர் வரும் ஓப்பனிங் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும், தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்பதை உணர்ந்து ரோஹித் சர்மா செயல்படவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சாபா கரீம் அறிவுறுத்தியுள்ளார்.