கொரோனாவால் உயிரிழந்த நடிகர்: படக்குழுவினருக்கு ஏற்பட்ட சிக்கல்

 நடிகர் நிதிஷ் வீராவின் மரணத்தால் அவர் நடித்து வந்த ஒரு படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நிதிஷ் வீராவிற்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது.

அதில் பாதிக் காட்சிகளில் நிதிஷ் நடித்துள்ளதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்