தனுஷ் தான் அப்படின்னா..செல்வராகவன் நீங்களும் இப்படியா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

செல்வராகவன் saanikaayidham ஜகமே தந்திரம் சாணிக்காயிதம்
By Petchi Avudaiappan Jan 23, 2022 06:58 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குநர் செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் வழிப்பறிக் கொள்ளையர்களாக மிகவும் வித்தியாசமான முறையில் பல நூதன செயல்களில் ஈடுபட்டு மிகவும் சுவாரசியப்படுத்துவார் என்று படத்தின் குழு தெரிவித்துள்ளது. இதனிடையே படத்தின் வன்முறைக் காட்சிகளால் சாணிக்காயிதம் திரையரங்குகளில் வெளியாகாது, நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியானது.

அதற்கேற்றாற்போல் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிக்கொண்டே சென்றது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதம் அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே போன்ற படங்களை ஓடிடியில் வெளியிட்டார்.

அதே போல் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள மாறன் படமும் ஓடிடியில் தான் வெளியாகவுள்ளது. அந்த வழியில் செல்வராகவனும் படமும் ஓடிடியில் வெளியாவது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.