தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : இரண்டு முக்கியமான இந்திய வீரர்களுக்கு இடமில்லை
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் தொடரை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
கேப்டவுன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கேப்டன் விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளது உறுதியாகியுள்ளதால் ஹனுமன் விஹாரி அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த முகமது சிராஜ் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விலகியுள்ளதால் அவரது இடத்தில் இஷாந்த் சர்மா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணிகள் விவரம் வருமாறு :
மயங்க் அகர்வால், கே.எல் ராகுல், விராட் கோலி, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ஷர்துல் தாகூர், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா