பேட்டியே கொடுக்காதது ஏன்? விஜய் தந்தை எஸ்ஏசி பரபர பேச்சு!
நான் இப்போது தவெகவில் இருக்கிறேன் என்று எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இண்டெர்வியூ
தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நான் இரண்டு வருஷத்திற்கு முன்னாடி வரை எந்த கட்சியிலும் இல்லை.
இப்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறேன். எனக்கு அண்ணாவை பிடிக்கும். பெரியாரை பிடிக்கும். கலைஞர் கருணாநிதியை பிடிக்கும். 1987 ஆம் ஆண்டு கலைஞரை கைது செய்து அழைத்து செல்லும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
எஸ்ஏசி விளக்கம்
ஏனென்றால் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அண்ணன்.. அண்ணன் என்று அழைப்பேன். நான் மைக்கையே பிடிக்கிறது இல்ல.. எந்த விழாக்களுக்கும் போகிறது இல்ல. இண்டெர்வியூக்கள் கொடுக்கிறது இல்ல. ஏனென்றால் என் மனதில் என்ன நினைக்கிறேனோ அது பாட்டுக்க வந்துகொண்டே இருக்கும்.
சினிமாவிலும் அப்படித்தான். நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான். ஒரு தடவை தான் பொறக்குறோம். ஒரு தடவை தான் இறக்க போகிறோம். இதற்கு இடையில் நாம் அப்படி வாழ்ந்துவிட்டு போயிடலாமே.. எதற்கு தினம் தினம் பயப்பட வேண்டும்.
ஒரு தடவை தான் சாகப்போறோம். என் பிளட் தான் இப்போ.. ஜீன் தானே.. நான் மனதில் தோன்றியதை பேசிவிடுவேன்.. அதனால் தான் அதிகம் பேச மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.