அதெல்லாம் பண்றதே விஜய் மனைவி சங்கீதா தான் - போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது குடும்பம் குறித்து பேசியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்வதற்கு, ஒரு முக்கிய காரணமாக அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இருந்திருக்கிறார். ஆனால், சமீபகாலமாக இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் தனது குடும்பம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "விஜய்யை நான் எங்கேயும் விட்டுக்கொடுத்ததில்லை. விஜய்க்கு என்னை தான் பிடிக்கும்.
சங்கீதா கையில் தான்
ஆனால் இருவரும் பேசியது கிடையாது. எனது பேரன் சஞ்சய் இயக்குநராக வெளிநாட்டிலும், பேத்தி திவ்யா சென்னையில் 12-ம் வகுப்பு படிக்கிறார்" என்றார். மேலும், திவ்யா சினிமாவிற்கு வருவாரா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் "அந்த விஷயம் என்னுடைய மருமகள் சங்கீதா கைக்குள் தான். அவங்களோட ஒவ்வொரு அசைவும் சங்கீதா கவனித்து கொள்கிறார். ஹோம் ஒர்க் செய்வது முதல் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வரை அவர் தான் எல்லாமாக இருந்து பார்த்து வருகிறார்.
எங்கள் வீட்டுக்கு வரும் போது, நான் எதாவது குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட, இருவரும் அம்மாவை பார்ப்பார்கள். அந்த அளவிற்கு ஒழுக்கமாக வளர்த்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.